முகப்பு
அரியலூர்

காசாங்கோட்டையில் வயல் தின விழா

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள காசாங்கோட்டை கிராமத்தில் கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் வயல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள காசாங்கோட்டை கிராமத்தில் கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் வயல் தின விழா அண்மையில் நடைபெற்றது.
அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானியும், தலைவருமான  அழகுகண்ணன் தலைமை வகித்து, நெல் ரகமான டிகேஎம் 13 பற்றி செயல்விளக்கம் அளித்தார்.தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா,உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் சரவணன் ஆகியோர் பங்கேற்று,கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.தா.பழூர் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் வேளாண்  திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். 
ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜா ஜோஸ்லின் மற்றும் சோபனா ஆகியோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →