அரியலூர்

சுண்ணாம்புக் கல் சுரங்கம்: மார்ச் 24-ல் கருத்து கேட்பு

DIN

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம்  ஆலத்தியூர் கிராமத்தில் தி ராம்கோ சிமென்ட் ஆலை உள்ளது. இந்த சிமென்ட் ஆலை, மணக்குடையான் கிராமம்,ஆதனக்குறிச்சி ஆகிய பகுதிகளில் சொந்த நிலத்தில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைக்க உத்தேசித்துள்ளது.
இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் தாமரைப்பூண்டி கிராமம், மணக்குடையான் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 24.3.2018 அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.  
அவை பதிவு செய்யப்பட்டு மறு நடவடிக்கைக்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுமம், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். 
இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பைப் பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் மு. விஜயலட்சுமி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT