முகப்பு
அரியலூர்

அரியலூரில் பலாப்பழம் வரத்து அதிகரிப்பு

அரியலூர் மாவட்டத்தில் பலாப்பழம் அதிக அளவில் கொண்டுவரப்பட்டுள்ளன.

Updated On : 21 மே, 2018 at 7:19 AM
பகிர்:

அரியலூர் மாவட்டத்தில் பலாப்பழம் அதிக அளவில் கொண்டுவரப்பட்டுள்ளன.
சீசன் தொடங்கியுள்ளதால் அரியலூரில்  பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. சராசரி அளவுள்ள ஒரு பழத்தின் விலை ரூ.200 முதல் ரூ300 வரை விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் சில்லறையாகவும், மொத்தமாகவும் பலாப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் பலர் பலாப் பழங்களை அதிக ஆர்வத்தில் வாங்கி செல்வதால் விற்பனை அதிகரித்துள்ளது.
இது குறித்து பண்ருட்டியைச் சேர்ந்த வியாபாரிகள் கூறியது:  மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பலாப் பழ சீசன். இந்த சீசன் காலங்களில் நாங்கள் விளைவித்த பலாப் பழங்களை பல்வேறு ஊர்களுக்கு லாரிகள் மூலம் சென்று விற்பனை செய்து வருகிறோம். 
கடலூருக்கு பக்கத்து மாவட்டமான அரியலூரில் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறோம்.
தற்போது சீசன் காலம் என்பதால் 2 முதல் 3 மாதங்கள் வரை இங்கு வந்து விற்பனை செய்வோம். நடப்பாண்டில் பலாப்பழம் விற்பனை சிறப்பாக உள்ளது என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.