முகப்பு
அரியலூர்

ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நா ள் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 22 மே, 2018 at 2:48 AM
பகிர்:

அரியலூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நா ள் அனுசரிக்கப்பட்டது.
அரியலூரில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மா. மு. சந்திரசேகர்உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருமானூர் புனித அருளானந்தர் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜிவ்காந்தி படத்துக்கு மாவட்ட மகளிரணி தலைவர் மாரியம்மாள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.