அரியலூர்

மாவட்ட நெட்பால் போட்டியில்  வென்றவர்களுக்குப் பரிசு

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக். பள்ளியில் 12 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான நெட்பால் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டியை சோழமாதேவி கிரீடு வேளாண் மைய முதுநிலை விஞ்ஞானி அழகு கண்ணன் தொடக்கி வைத்தார். போட்டிகளில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டன. போட்டிகளில், ஜயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளி முதலிடத்தையும், பாத்திமா மெட்ரிக். பள்ளி 2 ஆம் இடத்தையும், உதயநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 ஆம் இடத்தையும், சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 4 ஆம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றன.
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு அன்னை தெரசா பள்ளி தாளாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். மாநில நெட்பால் கழக செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் பரிசு கோப்பைகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT