ஆண்டிமடம் அருகே விவசாயி மர்மச் சாவு
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு விவசாயி மர்மமான முறையில் நள்ளிரவு உயிரிழந்து கிடந்தார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு விவசாயி மர்மமான முறையில் நள்ளிரவு உயிரிழந்து கிடந்தார்.
ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியதத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(45), விவசாயி. இவருக்கு மனைவி கவிதா,இரண்டு மகன்,ஒரு மகள் உள்ள நிலையில், விளைந்தை கிராமத்தைச் சேர்ந்த கலையரசி என்பவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,சனிக்கிழமை இரவு கலையரசி வீட்டுக்குச் சென்ற கலியபெருமாள் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து கலையரசியிடம் விசாரிக்கின்றனர்.