அரியலூர்

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் மீது மோசடி புகார்

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே சத்துணவு மையங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் மீது பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜயங்கொண்டம் அருகே வேலாயுதநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி ஜெயந்தி(47). ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து வரும் இவர், செங்குந்தபுரம், கீழகுடியிருப்பு, சோழங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கூலி வேலை
 செய்து வரும் பெண்களிடம், சத்துணவு மையங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. 
பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்கள் சிலர், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டதையடுத்து, ஜயங்கொண்டம் போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT