அரியலூர்

மக்கள் சேவை இயக்கத்தினர் புதிய நீர் பாசனத் திட்டங்கள் கோரி நூதன பிரசாரம்

DIN

தமிழகத்தில் புதிய நீர் பாசனத் திட்டங்களை உருவாக்க  வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் சிலர் வெள்ளிக்கிழமை ஓட்டைப் பானையில் நீர் ஊற்றி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிரசாரத்தின்போது, மழை நீர் கடலில் கலக்காமல் இருக்க புதிய நீர் 
பாசனத் திட்டத்தை உருவாக்க வேண்டும். 
அரியலூர் மாவட்டத்தில் பெரிய நீர் தேக்கங்களான சோழகங்கம், கண்டராதித்தச் சோழன் ஏரி, சுக்கிரன் ஏரி, கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர்ப் பிடிப்பு கொள்ளளவை உயர்த்த வேண்டும். செந்துறைப் பகுதிக்கு கால்வாய் மூலம் காவிரி நீரை கொண்டு செல்ல புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். ஜயங்கொண்டம் பகுதியிலுள்ள கொள்ளிடத்தில் கதவணையுடன் கூடிய அணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மக்களை சேவை இயக்கத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT