அரியலூர்

குறைகேட்புக் கூட்டத்தில் 303 மனுக்கள் அளிப்பு

DIN

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 303 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மு. விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார்.
கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவர், ஆட்சியரின் நிதியில் இருந்து 22 நலிந்த கலைஞர்களுக்கு தலா ரூ.12,000 வீதம் ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.பூங்கோதை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT