அரியலூர்

அரியலூர் மாவட்ட சிவன் கோயில்களில் சனி பிரதோஷம்

DIN

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியென்பெருமானை வழிபட்டனர்.
இதேபோல், திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அருள்மிகு அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரர், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய கார்கோடேஸ்வரர், திருமானூர் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதர் போன்ற சிவாலயங்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாதாரனை நடைபெற்றது.
அரியலூர்,செந்துறை, உடையார்பாளையம்,ஜயங்கொண்டம், விக்கிரமங்கலம், சுத்தமல்லி, பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர் ஆகிய பகுதிகளிலுள்ள சிவாலயங்களிலும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT