அரியலூர்

அரியலூர் கோயில்களில்  பிரதோஷ வழிபாடு

DIN

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில்  நந்தியெம்பெருமானுக்கு  சிறப்பு அபிஷேகம்,  சிறப்பு அலங்காரம் செய்து,  தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரர், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய கார்கோடேஸ்வரர், திருமானூர் 
காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதர் போன்ற சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாதாரனை நடைபெற்றது.அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஜயங்கொண்டம், விக்கிரமங்கலம், சுத்தமல்லி,பொன்பரப்பி,ஆண்டிமடம்,மீன்சுருட்டி,தா.பழூர் உள்ளிட்ட பகுதி சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT