அரியலூர்

விளாங்குடியில் நீர்நிலை ஆர்வலர்கள் சந்திப்பு

DIN

அரியலூர் மாவட்டம், விளாங்குடியில் நீர்நிலை ஆர்வலர்கள் சந்திப்பு  திங்கள்கிழமை நடைபெற்றது. 
நீர்நிலைகளை மேம்படுத்துவது பராமரிப்பது குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, விளாங்குடி மக்கள் சங்கம் ஒருங்கிணைப்பாளரான  ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராசன் தலைமை வகித்தார்.
 ஏரி,குளங்கள் தூர்வாரும் விழிப்புணர்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், பொறியாளர் மணிகண்டன்,கடலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் குஞ்சிதபாதம்,திரைப்பட உதவி இயக்குநர் குமரன்,சோலைவனம் அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் இளவரசன்,எமனேரி ஒருங்கிணைப்பாளர்  முன்னிலை வகித்து பேசினர்.இதைத் தொடர்ந்து, தொண்டனேரி தூர்வாரும் பணியை நீர்நிலை ஆர்வலர்கள் தொடக்கி வைத்தனர். முன்னதாக, மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் வரவேற்றார். முடிவில் விநாயகா கல்வி நிறுவனங்களின் தாளாளரும், சமூக ஆர்வலருமான பாஸ்கர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT