அரியலூர்

ஏலாக்குறிச்சியில் திருவிளக்கு பூஜை

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
பங்குத் தந்தை சுவக்கின் முன்னிலை வகித்தார். குடந்தை மறைமாவட்ட ஆயர் எப். அந்தோணிசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நல்ல மழை பெய்யவும், அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் வாழவும், விவசாயம் செழிக்கவும் திருப்பலி நடைபெற்றது. விளக்கு பூஜையில் ஏலாக்குறிச்சி, சுள்ளங்குடி, விழுப்பனங்குறிச்சி, திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி பங்குத் தந்தை ஆல்வின் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். அதேபோல், வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூர் கிராமத்தில் உள்ள சௌந்தரநாயகி உடனாய சோமண்டீஸ்வரர் கோயிலில் ஆடிமாதத்தையொட்டி, நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT