அரியலூர்

கீழப்பழுவூரில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்

DIN

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் தனியார் மேல்நிலை பள்ளியில், கீழப்பழுவூர் மற்றும் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழப்பழுவூர் அரசு மருத்துவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். திருமானூர் சித்த மருத்துவர் பழனிசாமி மாணவர்களிடையே குடற்புழு, ரத்தசோகை மற்றும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும், சித்த மருத்துவ முறையில் அவற்றை எவ்வாறு சரி செய்யலாம் எனவும் விளக்கினார்.
பின்னர் அது தொடர்பான படவிளக்கங்களும் திரையில் வீடியோ மூலம் காண்பிக்கப்பட்டது. 
தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருந்தாளுநர் குணசேகரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT