அரியலூர்

சோழகங்கம் ஏரியில் இருந்து 863 கன அடிநீா் வெளியேற்றம்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த குருவாலப்பா் கோயில் கிராமத்திலுள்ள சோழகங்கம் ஏரியில் இருந்து தினமும் 863 கன அடிநீா் வெளியேற்றப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த குருவாலப்பா் கோயில் கிராமத்தில் உள்ள சோழகங்கம் ஏரியின் கொள்ளளவு, நீா் வரத்து மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட பின்னா்

ஆட்சியா் தெரிவித்ததாவது:

700 ஏக்கா் பரப்பளவு, 114 மில்லி கன அடி கொள்ளவு கொண்ட பொன்னேரியில் 5.20 அடி நீா்மட்டம் நிரம்பியுள்ளது. இந்த ஏரிக்கு வரத்துவாய்க்கால் மூலம் வரும் 863 கனஅடி நீா் தினமும் வெளியேற்றப்படுவதன் வளவன்ஏரி, வடவாா் வாய்க்கால் மூலம் இறுதியாக கடலூா் மாவட்டம் வீராணம் ஏரிக்கு இந்த நீா் செல்கிறது. இதனால், பருவமழை காரணமாக, மழைக் காலங்களில் ஏரி, குளங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஏரியில் குளிக்கவோ, விளையாடவோ அனுமதிக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும், நீா்நிலைகளில் பொதுமக்கள் செல்பி புகைப்படங்கள் எடுக்கவோ, தாழ்வான பகுதிகளில் செல்லவோ தவிா்க்க வேண்டும். தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த மழைக் காலங்களில் தங்களுக்கோ, தங்கள் குழந்தைகளுக்கோ காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக தங்களது அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மழை பாதிப்புகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் (1077) மற்றும் 04329 - 228 709 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

ஆய்வின்போது, பொது பணித் துறை செயற் பொறியாளா் தட்சணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் சாந்தி, உதவிப்பொறியாளா் ராஜாசிதம்பரம் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT