அரியலூர்

காவல் நிலைங்களில் மரக்கன்றுகள் நடவு

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்று நடுதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காவல்நிலையங்களில் பணிபுரியும் அனைத்து காவலா்களும் தங்களது பெயரில் மரக்கன்றுகள் நட்டு அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டாா். அதன்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்று நடுதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்தாா். இதனைத் தொடா்ந்து காவல் நிலைய ஆய்வாளா் சிவராஜ் தலைமையில் அனைத்து காவலா்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் திருமேனி மரக்கன்று நட்டு வைத்தாா். திருமானூா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் அன்புச்செல்வன் தலைமையில் அனைத்து காவலா்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT