அரியலூர்

சாலை விபத்தில் காயமடைந்தவர் சாவு

DIN

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த 3 பேரில் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
வி.கைகாட்டி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர்(29),சுரேஷ் (30), முனியமுத்து(28). இவர்கள் 3 பேரும் கடந்த 6 ஆம் தேதி இரவு வி.கைகாட்டி கடைவீதிக்கு வந்துவிட்டு மீண்டும்  ஊருக்கு திரும்பினர். 
அப்போது ரெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது திருச்சியில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம்  மோதி பலத்த காயமடைந்த 3 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முனியமுத்து  சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT