அரியலூர்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN

அரியலூர் அருகேயுள்ள எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு-2, நிர்மலா ஆர்.சி நடுநிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி  புதன்கிழமை நடைபெற்றது. 
அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு-2 அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற பேரணியை மதுக்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். நிர்மலா ஆர்.சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நம்பிக்கைமேரி, ஆசிரியர்கள் ஜெரால்டு, ஜான்மார்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது நிர்மலா ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் தொடங்கி அண்ணாநகர் மற்றும் முக்கிய வீதியின் வழியாகச் சென்று எருத்துக்காரன் ஊராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட மேற்கண்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள், பிளாஸ்டிக் தீமைகள், அதைப் பயன்படுத்த வேண்டாம்  என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச்  சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT