அரியலூர்

விவசாயிகளுக்கு கோடை உழவுப் பயிற்சி

DIN

அரியலூர் அருகேயுள்ள புதுப்பாளையம்,ஆலந்துறையார் கட்டளை மற்றும் காவனூர் ஆகிய கிராமங்களில், மானாவாரி நிலமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோடை உழவுக் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயற்சி அளிக்கப்பட்டது.
காவனூர் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியை அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் க. பூவலிங்கம் தலைமை வகித்து,கோடை உழவின் முக்கியத்துவம் குறித்தும்,மண்ணின் நீர் உயர்வது பற்றியும் எடுத்துரைத்தார்.
வேளாண் அலுவலர் அ. சவிதா, மண்மாதிரிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும், பரிந்துரைக்கப்பட்ட உரங்கள் இடுவதால் உரச்செலவு குறைவு, பயிர்களில் மகசூல் அதிகரிப்பு பற்றி எடுத்துரைத்தார். 
மேலும் அவர் கோடை உழவு ஏக்கருக்கு ரூ.500- மானியம் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என்றும், பண்ணைக் குட்டை 30மீ நீளம் 30மீ அகலம் 11/2 மீ ஆழம் அளவில் அமைத்து மழைநீர் சேகரிப்பதால் நீர்மட்டம் உயர்ந்து மானாவாரி பயிர்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். விருப்பமுள்ள விவசாயிகள் பெயர்ப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். துணை வேளாண் அலுவலர் அ. இளவரசன், உதவி வேளாண் அலுவலர் எம். வேல்முருகன் ஆகியோர் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கோடை உழவின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT