அரியலூர்

சத்துணவு சமையலர், உதவியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையலர், உதவியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார். பயிற்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சசிகுமார் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு முறைகள், உணவுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம்  உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். உணவாக்க தொழில்நுட்ப பயிற்சி நிறுவன அலுவலர் ரவி, உணவுத் தயாரிப்பின் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, முட்டை எவ்வாறு வேக வைத்தல், வேக வைத்த பின்பு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறினார்.
மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமிதரன் தன்சுத்தம், பாதுகாப்பான குடிநீர், முதலுதவி பற்றிய குறிப்புகள், உணவில் விஷம் ஏற்படுவதன் காரணம் குறித்து விளக்கினார்.  பயிற்சியில் ஜயங்கொண்டம் ஒன்றியசத்துணவு மைய சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT