அரியலூர்

பொங்கல் விழாவையொட்டி மாவட்ட ஹாக்கி லீக் போட்டி

DIN

பொங்கல் விழாவையொட்டி அரியலூரில் நடைபெற்ற ஹாக்கி லீக் போட்டியில் வென்ற அணிக்கு செவ்வாய்க்கிழமை கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாண்ட்போர்ட் பள்ளி வளாகத்தில், மாவட்ட ஹாக்கி இந்திய சங்கம், பசுபதி நினைவு ஹாக்கி கழகம் சார்பில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற இப்போட்டியில் 6 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை, முன்னாள் இந்திய அணி வீரர் ரஜினிகாந்த், ரயில்வே ஹாக்கி அணி வீரர் வெங்கடேசன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இப்போட்டியில் பசுபதி நினைவு கழகம் முதல் இடத்தையும், மாண்ட் போர்ட் பள்ளி முன்னாள் மாணவர் சங்க ஹாக்கி அணி 2 ஆம் இடத்தையும், யோகபாரதி ஹாக்கி கிளப் அணி 3 ஆம் இடத்தையும், டாக்டர் அப்துல்சாதிக் நினைவு ஹாக்கி கிளப் அணி 4 ஆம் இடத்தையும் வென்றது.
இவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா அன்று மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் ஹாக்கி இந்தியா சங்கத்தின் பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், கோப்பைகளை வழங்கினார்.  பசுபதி நினைவு ஹாக்கி கழக செயலர் குணசேகரன் வரவேற்றார். துணை செயலர் மகேஷ்பாபு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாண்ட்போர்ட் உடற்கல்வி ஆசிரியர் தர்மலிங்கம், ஹாக்கி பயிற்சியாளர் ஜபருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT