கீழக்காவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து,
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து, வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கீழக்காவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூலமாக ஆசிரியர் பணியைக் கொச்சைப்படுத்தி வருவதாகவும், எனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினர்.