அரியலூர்

அரியலூரில் 5,532 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்

DIN


அரியலூர் மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு பயிலும் 5,532 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என் ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். 
அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு மேல்நிலை வகுப்பு பயிலும் 5,532 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது, கடந்தாண்டு படித்த மாணவர்களுக்கும் விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியர்கள் நா.சத்தியநாராயணன் (அரியலூர்), வே.ஜோதி (உடையார்பாளையம்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT