அரியலூர்

விவசாயிகளுக்கான மதிப்பீட்டாய்வு கூட்டம்

DIN

அரியலூர் அருகேயுள்ள பெரியநாகலூர் கிராமத்தில் வேளாண் துணை சார்பில் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைக் கொண்டு மக்கள் பங்கேற்பு மதிப்பீட்டாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் க. பூவலிங்கம் தலைமை வகித்து,கோடை உழவின் முக்கியத்துவம், மக்காச்சோள பயிர்ப் பாதுகாப்பு முறைகள் குறித்து பேசினார். பின்னர் மானாவாரி நில விவசாயிகளுக்கு தொழில்நுட்பக் கையேடுகளை வழங்கினார்.  வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் சுரேஷ், கீரிடு வேளாண் அறிவியல் மையம் வல்லுநர் திருமலைசாமி ஆகியோரும் பேசினர்.
கூட்டத்தில் கோடை உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.500 வீதம் பெற சிட்டா, ஆதார் கார்டு நகல், வங்கிக் கணக்கு எண் விவரம் போன்ற ஆவணங்களை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. வேளாண் அலுவலர் அ. சவிதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT