அரியலூர்

வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் ஆய்வு

DIN


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்துக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களுரு பாரத மின்னணு நிறுவனத்தைச் சேர்ந்த 5 பொறியாளர்கள் மேற்கொண்டனர். மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் நா.சத்தியநாராயணன், தேர்தல் தனி வட்டாட்சியர் க.சந்திரசேகரன் மற்றும் அரியலூர் வட்டாட்சியர் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT