அரியலூர்

தேர்தல் விளம்பரங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை

DIN

பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களைக் கண்காணிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை பார்வையிட்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:  மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களை கண்காணிக்க  கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 
உள்ளுர் தொலைக்காட்சியில் வரும் அரசியல் விளம்பரம் ஒளிபரப்புவதற்கு  இக்குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும். பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரம், கட்டணம் செலுத்தும் செய்திகள் வெளியிடப்படுவதை கண்காணித்து அதற்கான செலவினக் கணக்குகளை இந்தக் குழுவினர் தாக்கல் செய்வார்கள். மேலும், அனைத்து விதமான அரசியல் தொடர்பான விளம்பரங்களையும் கண்காணிப்பார்கள். அரசியல் கட்சிகளின் ஊடக  விளம்பரங்கள் கணக்கீட்டு தொகை அந்தந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இ-பதிப்பு செய்தித்தாள்களில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு ஊடக மையம் மற்றும் ஊடகச் சான்றிதழ் வழங்கும் குழுவிடம் சான்றிதழ் பெறவேண்டும்.  
தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாள் செய்தித்தாளில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கும் சான்றிதழ் பெறப்படவேண்டும். தவறும்பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மையத்தில்  அலுவலர்கள் 24 மணி நேரமும்  பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.
அப்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT