அரியலூர்

அரியலூர் அருகே விவசாயிகள் முற்றுகை போராட்டம்

DIN

அரியலூர் அருகே விவசாயிகள் சிலருக்கு வழங்கப்படாமல் உள்ள மத்திய அரசின் ரூ.6 ஆயிரத்தை உடனடியாக வழங்கக் கோரி கீழக்காவட்டாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசு விவசாயிகளுக்கு அறிவித்த ரூ. 6 ஆயிரம் கீழக்காவட்டாங்குறிச்சி விவசாயிகள் பாதி பேருக்கு இதுவரை வழங்கப்படவில்லை, அவர்களுக்கு உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கில் முதல் தவணை தொகை ரூ.2 ஆயிரத்தை வரவு வைக்க வேண்டும். இதேபோல முதல் தவணை தொகை பெற்ற விவசாயிகளுக்கு இரண்டாவது தவணை தொகையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவலறிந்த அரியலூர் வட்டாட்சியர் கதிரவன், வருவாய் ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் ,விவசாய சங்க மாவட்டத் தலைவர் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT