அரியலூர்

புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலைவருவாய் கோட்டாட்சியர் விசாரணை

DIN


அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே  திருமணமான 7 நாட்களில் புது மணப் பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வருகின்றார். 
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள பெரியாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி - அஞ்சலை தம்பதியின் மகள் ரேகா (27). இவரை மேலூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலையின் அண்ணன்  காசிநாதன் மகன் பன்னீர்செல்வத்திற்கு(30) திருமணம் செய்து வைக்க பெண் கேட்டபோது அஞ்சலை மறுத்து விட்டாராம். இதையடுத்து, மேலூர் கிராமத்தைச் சேர்ந்த  சிவசாமி, ரேகாவை வரவழைத்து கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பன்னீர் செல்வத்துக்கு திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்து அஞ்சலை, அண்ணன் காசிநாதன் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரேகா தூக்கிட்டு இறந்து விட்டதாக அஞ்சலைக்கு ஒருவர்
தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மேலூர் சென்று பார்த்தபோது, பன்னீர் செல்வம் வீட்டில் ரேகா இறந்து கிடந்தது தெரியவந்தது. அஞ்சûலை ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி தலைமையிலான போலீஸார் சடலத்தை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 7 நாளில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதால், வரதட்சிணை காரணமா என வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT