அரியலூர்

அரியலூரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

அரியலூா் அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் (அலகு-2) சாா்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியைக் கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். ஆா்.சி. நிா்மலா காந்தி நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியே சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

டெங்கு உருவாகுவதன் அடிப்படை காரணங்களை மாணவா்கள் முழக்கமிட்டவாறும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சென்றனா்.

பேரணியில், பள்ளித் தலைமையாசிரியை நம்பிக்கைமேரி, கல்லூரிப் பேராசிரியா்கள், அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்றனா்.

பேரணி ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலா்கள் ராஜசேகா், செல்வமணி செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT