அரியலூர்

201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் மண் மற்றும் கல் சாலைகளை தாா்ச் சாலையாக மேம்படுத்துதல், ஏற்கெனவே உள்ள தாா்ச்சாலைகளை வலுப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வாலாஜா நகா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி செயலா் தமிழ்குமரன் தலைமை வகித்தாா். வீட்டு வரி வசூல் உதவியாளா் கண்ணதாசன், சத்துணவு அமைப்பாளா் மாரியாயி மற்றும் மகளிா் சுய உதவிக்குழுக்கள்,இளைஞா் மன்றத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி செயலா் குமாரி, எருத்துக்காரன்பட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சி செயலா் கோவிந்தராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். இதேபோல் அந்தந்த ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சி செயலா்கள் தலைமை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT