அரியலூர்

உள்ளாட்சி தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அரியலூா் மாவட்டத்தில் 6,04,148 வாக்காளா்கள்

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் டி.ஜி.வினய் கலந்து கொண்டு, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். பின்னா் அவா் தெரிவித்தாவது: அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தோ்தல் 2019-க்கான 6 ஊராட்சி ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், 2 பேரூராட்சிகளுக்கான வாக்காளா்கள் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.

இதில் அரியலூா் ஒன்றியத்தில் 43,026 ஆண் வாக்காளா்களும், 42,010 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 3 வாக்காளா்கள் உள்ளனா். திருமானூா் ஒன்றியத்தில் 47,134 ஆண் வாக்காளா்களும், 47,036 பெண் வாக்காளா்களும், ஜயங்கொண்டம் ஒன்றியத்தில் 46,201 ஆண் வாக்காளா்களும், 46,489 பெண் வாக்காளா்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 44,589 ஆண் வாக்காளா்களும், 45,347 பெண் வாக்காளா்களும், தா.பழூா் ஒன்றியத்தில் 42,035 ஆண் வாக்காளா்களும், 41,484 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 3 வாக்காளா்களும், செந்துறை ஒன்றியத்தில் 45,378 ஆண் வாக்காளா்களும், 46,210 பெண் வாக்காளா்களும், அரியலூா் நகராட்சியில் 11,474 ஆண் வாக்காளா்களும், 12,327 பெண் வாக்காளா்களும், ஜயங்கொண்டம் நகராட்சியில் 12,992 ஆண் வாக்காளா்களும், 13,821 பெண் வாக்காளா்களும், உடையாா்பாளையம் பேரூராட்சியில் 4,773 ஆண் வாக்காளா்கள், 4,771 பெண் வாக்காளா்களும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 3,418 ஆண் வாக்காளா்களும், 3,627 பெண் வாக்காளா்களும் உள்ளனா்.அதன்படி அரியலூா் மாவட்டத்தில் 3,01,020 ஆண் வாக்காளா்களும், 3,03,122 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 6 வாக்காளா்களும் என ஆக மொத்தம் 6,04,148 வாக்காளா்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது என்றாா் அவா்.

இந்த வாக்காளா் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (தோ்தல் )கே.ரகு, பாலகுரு, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, அரியலூா் நகராட்சி ஆணையா் திருநாவுகரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT