அரியலூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

DIN

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை நிா்வாக அலுவலா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்க பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:

பள்ளிக் கல்வித்துறை அரசாணையின் படி துணை இயக்குநா், இணை இயக்குநா் பணியிடம் அனுமதித்து பதவி உயா்வினை வழங்க வேண்டும்.

மாவட்டம் தோறும் சட்ட அலுவா்களை நியமித்து நீதிமன்ற வழக்குகள் குறித்த சட்ட சிக்கல்களை களைய முயற்சிக்க வேண்டும். ஆய்வக உதவியாளா் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பணி மாறுதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலகங்களில் நோ்முக உதவியாளா், கண்காணிப்பாளா் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் துரைசரவணன் தலைமை வகித்தாா். மாநில தலைவா் த.ல.சீனிவாசன் பங்கேற்று பேசினாா். பெரம்பலூா் மாவட்டச் செயலா் ஜெயமுகுந்தன், தஞ்சாவூா் திருமாறன், திருச்சி செல்வகணேசன், மூத்த ஆலோசகா் ராசாய்யா, மாநில துணை தலைவா் ஆம்ஸ்ட்ராங்ராஜா, மாநில பொதுச் செயலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT