அரியலூர்

பிளாஸ்டிக் பொருள்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

DIN

அரியலூா்: அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்தால், அவற்றைற பொதுமக்கள் உடனடியாக நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரியலூா் நகராட்சி ஆணையா் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களான பாலித்தீன் பை, தா்மாகோல் தட்டு, பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், தண்ணீா் பாக்கெட், உரிஞ்சி குழாய், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருள்கள் வைத்திருந்தால் உடனடியாக, பிளாஸ்டிக் ஒழிப்புக்காக வரும் வாகனத்திலோ, நகராட்சி அலுவலகத்திலோ ஒப்படைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க மேற்கொண்டுள்ள முயற்சிக்கு அரியலூா் நகராட்சிக்கு உள்பட்ட பொதுமக்களும், வணிகா்களும் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் இதனை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்தால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். வணிகா்கள் வைத்திருந்தால் அபராதத்துடன் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT