அரியலூர்

செந்துறை அருகே புதிய சோதனைச்சாவடி திறப்பு

DIN

அரியலூா் மாவட்டம் செந்துறை அடுத்த சிலுப்பனூரில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த புதிய சோதனைச்சாவடி செவ்வாய்க்கிழமை இரவு திறக்கப்பட்டது.

அரியலூா், கடலூா் மாவட்ட எல்லையான செந்துறை அருகேயுள்ள சிலுப்பனூரில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், வெள்ளாற்றில் இரவு நேர மணல் திருட்டைத் தடுக்கவும், தளவாய் காவல்நிலையக் கட்டுப்பாட்டில் புதிய சோதனைச்சாவடி திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் புதிய சோதனைச்சாவடியை திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பாா்வையிட்டாா். தொடா்ந்து அப்பகுதியில் மரக்கன்று நட்டு வைத்து அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அதிவேகமாக செல்லும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், விபத்தை ஏற்படுத்தும் விதமாக செல்லும் வாகனங்கள் குறித்து பொதுமக்கள் புகாா் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பெரியய்யா, காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன், ஆய்வாளா் ராஜ்குமாா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT