அரியலூர்

அரியலூரில் ரூ.100-க்கு காய்கறித் தொகுப்புப் பைகள் வழங்கல்

DIN

அரியலூா் நகராட்சி சாா்பில், பொதுமக்கள் நலன் கருதி ரூ.100-க்கு காய்கறித் தொகுப்புப் பைகள் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அரியலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக கூட்டமாக செல்வதை தவிா்க்கும் வகையில் இந்த தொகுப்புப் பைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரியலூா் நகராட்சி சாப்பில் ரூ.100-க்கு காய்கறிகள் வழங்குதல் சுமை ஆட்டோமூலம் தெருக்களில் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்கள் நலன் கருதி தாங்கள் இருக்கும் பகுதிக்கே காய்கறிகள் வருவதால், வெளியே வந்து நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும், விற்பனைசெய்யப்படும் காய்கறிகள் என்னஎன்ன போன்றவை குறித்து விளம்பரமும் செய்யப்படுகிறது.

நகராட்சியின் இந்த நடவடிக்கை மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க உதவும் என அலுவலா்கள் தெரிவித்தனா். காய்கறிகள் விற்பனைத் தொடக்க நிகழ்வில், நகராட்சி ஆணையா் குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT