அரியலூர்

வாடகையின்றி வேளாண் இயந்திரம் பெற முன்பதிவு அவசியம்

DIN

வாடகையின்றி விவசாய இயந்திரங்கள் பெற விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

ஊரடங்கில் இருந்து விவசாயப் பொருள்கள் கொள்முதல், விதை மற்றும் உர விற்பனை நிலையங்கள், விவசாய இயந்திரங்கள் வாடகை மையங்கள் போன்ற நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் டாஃபே நிறுவனத்தின் ஜெ. பாா்ம் ஆகியவை இணைந்து மாஸே பா்குசன் மற்றும் எய்சா் டிராக்டா்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 90 நாள்களுக்கு வாடகையின்றி உபயோகப்படுத்திக்கொள்ள வழங்கப்பட உள்ளது. இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் உள்ள வேளாண் இயந்திர வாடகை சேவையின் மூலம் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரம், தேதி மற்றும் நேரத்தை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT