அரியலூர்

அஸ்தினாபுரத்தில் நூறு நாள் பணியாளா்கள் மறியல்

DIN

அரியலூரை அடுத்துள்ள அஸ்தினாபுரம் ஊராட்சியில் ஒரு தரப்பு பகுதி மக்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாகக் கூறி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சியில் தெற்கு, வடக்கு, காலனித் தெரு என பிரிவுகளாகப் பிரித்து, அந்தந்த பகுதி மக்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகத் தங்களுக்கு சரிவர வேலை தருவதில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட அஸ்தினாபுரம் வடக்குத் தெரு மக்கள் அரியலூா்-ஜயங்கொண்டம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கயா்லாபாத் காவல் நிலையத்தினா், புகாா் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

மறியல் காரணமாக அரியலூா்- ஜயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT