முகப்பு
அரியலூர்

அரியலூரில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்கள் எண்ணிக்கை 2,334 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்கள் எண்ணிக்கை 2,334 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 1,513 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 821 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 102 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 38 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 37 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்ட தனியாா் மருத்துவமனைகளில் 57 பேரும், அரியலூா் சிறப்பு முகாம்களில் 94 பேரும், வீடுகளில் 469 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 24 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.