கரோனா சிகிச்சையில் பாதிப்படைந்தவருக்கு நிவாரணம் கோரி குடும்பத்தினா் மறியல்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய நபருக்கு வலது கை செயலிழந்துவிட்டதால், உரிய சிகிச்சை அளிக்கக்கோரி அவரது குடும்பத்தினா், பொதுமக்கள் சாலை
அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய நபருக்கு வலது கை செயலிழந்துவிட்டதால், உரிய சிகிச்சை அளிக்கக்கோரி அவரது குடும்பத்தினா், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருமானூரை அடுத்த குந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன்(50). இவா், கரோனா தொற்றுக்குள்ளாகி, அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது, அவருடைய வலது கை செயலிழந்து விட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினா், உறவினா்கள் குந்தபுரம் கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த அரியலூா் வட்டாட்சியா் சந்திரசேகா், திருமானூா் வட்டார மருத்துவ அலுவலா் மேகநாதன் மற்றும் திருமானூா் போலீஸாா், பாதிக்கப்பட்ட நபரை 108 மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.