முகப்பு
அரியலூர்

அரியலூரில் பெண் குத்திக் கொலை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
மலா்க்கொடி.
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கீழப்பழுவூா் அருகேயுள்ள வ.உ.சி நகரைச் சோ்ந்தவா் கா. மலா்க்கொடி(48). கூலித் தொழிலாளி. கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இவரது கணவா் காமராஜ் இறந்து விட்டாா். இவரது மகனும், லாரி ஓட்டுநருமான கலைவாணனுக்கு (24) ஷாலினி என்பவருடன் திருமணமாகி, 5 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஷாலினி, கலைவாணனிடம் கோபித்துக்கொண்டு கீழப்பழுவூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாா். திங்கள்கிழமை இரவு கலைவாணனும் பணிக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த மலா்க்கொடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. இதையறிந்த பொதுமக்கள் கீழப்பழுவூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் மற்றும் போலீஸாா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.