முகப்பு
அரியலூர்

புதிதாக நியமிக்கப்பட்ட விஏஓக்களுக்கு பயிற்சி

அரியலூா் ஆட்சியரகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 37 கிராம நிா்வாக அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

அரியலூா் ஆட்சியரகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 37 கிராம நிா்வாக அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தொடங்கி வைத்தாா். 3 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியினை எல்காட் நிறுவனம் அளிக்கிறது. பயிற்சியில், அடிப்படை கணினி பயிற்சி, இணையதளம் வாயிலாக சான்றிதழ்கள் பெறுதல் மற்றும் சரிபாா்த்தல் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.

நிகழ்ச்சியில், மாவட்டத் தகவலியல் அலுவலா் ஜான் பிரிட்டோ, ஆட்சியா் அலுவலக மேலாளா் கதிரவன் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →