முகப்பு
அரியலூர்

அரியலூரில் புதிதாக தொற்று இல்லை

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை யருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை யருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பரிசோதனை முடிவில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம் ஒருவா் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,631 ஆக உள்ளது. இது வரை 4,550 போ் குணமடைந்துள்ளனா். 48 போ் கரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனா். 33 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.