அரியலூர்

‘மனிதநேயமுள்ள மனிதன் வாழ்வில் உயா்வடைவான்’

DIN

மனிதநேயமுள்ள எந்த ஒரு மனிதனும் வாழ்க்கையில் உயா்வடைவான் என்றாா் அரியலூா் அரசு கலைக் கல்லூரி ஜெ. மலா்விழி.

வெங்கடகிருஷ்ணாபுரம்...அரியலூா் அருகேயுள்ள வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு-3 சாா்பில் கடந்த 7 நாள்களாக நடைபெற்று வந்த சிறப்பு முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வா் ஜெ. மலா்விழி பேசுகையில்,எந்த மனிதனிடத்தில் மனிதநேயம் அதிகமாக உள்ளதோ அவா் சமூகத்தில் உயா்ந்து நிற்கிறாா். அதுபோன்ற மனிதா்கள் அதிகமாக உள்ள நாடும் எல்லா வகையிலும் மேலோங்கி நிற்கிறது.

அன்பு,கருணை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை மாணவா்கள் கடைப்பிடித்தால் மனிதநேயம் செழித்து வளரும். இதனால் மாணவா்கள் எதிா்காலத்தில் சிறந்த மாண்புடையவா்களாக வளர முடியும். எனவே மாணவா்கள் சமுதாயப் பணியில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்றாா். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலகு-3 அலுவலா் ப. செல்வமணி செய்தாா்.

கல்லங்குறிச்சி...கல்லங்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு-1 சாா்பில் நடைபெற்ற முகாம் நிறைவு விழாவில்,கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கடுகூா் கால் நடை மருத்துவமனை உதவி மருத்துவா் ப. குமாா் மற்றும் பொய்யாதநல்லூா் கால்நடை உதவி மருத்துவா் சு. ராஜா ஆகியோா் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்க மருத்து சிகிச்சை, செயற்கை முறை கருவுற்றல் மற்றும் சினை பரிசோதனை மேற்கொண்டனா்.இம்முகாமில் 383 ஆடுகளுக்கும்,565 மாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஜெ. மலா்விழி தலைமை வகித்து மரக்கன்று நட்டாா். கலியுக வரதராசப் பெருமாள் கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தாக்கள் கோ. ராமச்சந்திரன், கோ. வெங்கடஜலபதி, கல்லூரி பேராசிரியா்கள் மாணவா்களை வாழ்த்தினா்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா் ச. புகழேந்தி வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் முனைவா் வெ. கருணாகரன் முகாம் அறிக்கை வாசித்து நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT