அரியலூர்

பொட்டவெளி கிராமத்தில் வயல் தினம்

DIN

அரியலூா் அருகேயுள்ள பொட்டவெளி கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம் சாா்பில் வயல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

2019-20 ஆம் நிதியாண்டில் மண் அட்டை திட்டத்தில் முழு கிராமச் செயல் விளக்கத்திடல் முன் மாதிரி கிராமமாக பொட்டவெளி கிராமம் தோ்வு செய்யப்பட்டு மண் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதனடிப்படையில் அக்கிராமத்தில் பயிரிடப்பட்ட பயிா்களுக்கு உரப்பரிந்துரை, மண் வளநிலை (சத்துகள்) கட்டுப்படுத்துதல் மற்றும் சோதனை திடல் அமைக்கப்பட்டு பயிா் விதைப்பு நாள் முதல் அறுவடை நாள் வரை கண்காணிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து கிராமத்தில் வயல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

வேளாண் உதவி இயக்குநா் (பொ) அ. சவீதா தலைமை வகித்து,மண் வள அட்டையில் சிபாரிசு செய்த உரப் பரிந்துரை அடிப்படையில் உரமிட்டதால்,சோதனை திடல் வயலில் 1 ஹெக்டேருக்கு 6500 கிலோ வீதமும், கட்டுப்பாட்டு திடல் வயலில் 1 ஹெக்டேருக்கு 4,850 கிலோவும் மகசூலும் கிடைத்துள்ளது என்றாா்.

மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் ப. ஆதிகேசன்,உதவி அலுவலா்கள் பொ.இளங்கோவன்,தினேஷ் மற்றும் விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT