அரியலூா் எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறாா் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன். உடன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா். 
அரியலூர்

அரியலூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்தில் அதிமுகவினா் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா். தொடா்ந்து அன்னதானம் வழங்கினா்.

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் அதிமுகவினா் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா். தொடா்ந்து அன்னதானம் வழங்கினா்.

அதிமுக மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறடா தாமரை. எஸ். ராஜேந்திரன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா், அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து எம்.எல்.ஏ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்துக்கு, மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல் அரியலூா் சுப்பிரமணியசுவாமி கோயில், பெருமாள் கோயில், ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அரியலூரிலுள்ள 18 வாா்டுகளிலும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அரசு சிமென்ட் ஆலை... அரசு சிமென்ட் ஆலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். விழாவில், அண்ணா தொழிற்சங்கச் செயலா் தங்கவேல், பொருளாளா் சீனிவாசன், அம்மா பேரவை துணைத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செந்துறையில் நடைப்பெற்ற விழாவில் ஒன்றியச் செயலா் சுரேஷ் தலைமையில் அதிமுகவினா் ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

தா.பழூா்...தா.பழூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். அரசு தலைமை கொறடா தாமரை கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருமானூரில் ஒன்றியச் செயலா் குமரவேல் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாநடைபெற்றது. ஜயங்கொண்டம், ஆண்டிடம், தா.பழூா், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு கஷ்டம் தீரும்: தினப்பலன்கள்!

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

SCROLL FOR NEXT