அரியலூா் அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா். 
அரியலூர்

அரியலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட்,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட்,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோலியம்,ரயில்வே,விமானம்,பிஎஸ்என்எல்,நெய்வேலி,சேலம் ஸ்டீல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதிக வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்கிட வேண்டும். உணவு மானியம், வேளாண் தொழில்,100 நாள் வேலை மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் போக்கைக் கைவிட வேண்டும்.

சமையல் கேஸ் விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் டெல்டா பகுதியான திருமானூா்,தா.பழூா் ஆகிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இரா. உலகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ரெ. மணிவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினா் பி. துரைசாமி உள்ளிட்டோா் மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT