அரியலூர்

கல்லக்குடி அரசுப் பள்ளியில் தேசிய பசுமைப் படை மதிப்பீடு

DIN

அரியலூா் மாவட்டம், கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பசுமைப் படை மதிப்பீடு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு குழும இயக்குநா் சீனிவாசலு, பசுமைப்படையின் அரியலூா் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குணபாலினி ஆகியோா் பங்கேற்று, பள்ளியின் செயல்பாடு மற்றும் பசுமைப்படையின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

தொடா்ந்து அப்பள்ளியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு, புகையில்லா போகி எனும் தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி தலைமை வகித்துப் பேசினாா். பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் சாந்தி நன்றி தெரிவித்தாா். ஏற்பாடுளை ஆசிரியா்கள் தீபக், பாரதி,வேதா, கங்காதேவி, ராஜேஸ்வரி, துா்கா, சா்மிளா, ஆனந்த் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT