அரியலூர்

எச்ஐவி பாதிப்புக்குள்ளானவா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

DIN

ஜயங்கொணம் அன்னை தெரசா கல்வி வளாகத்தில், மாவட்டத்தில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்கம், பரப்ரம்மம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிமா சாசனத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். மண்டல ஒருங்கிணைப்பாளா்கள் சண்முகம், சுபா ராமு, அன்பரசன், தண்டபாணி, எல்ஐசி முகவா் ஆறுமுகம், மருந்தாளுநா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் உஷா செந்தில்குமாா், பரப்ரம்மம் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் முத்துக்குமரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் உதவித் தொகைகளை வழங்கினா். முன்னதாக அரியலூா் மாவட்ட எச்ஐவி பாதிக்கப்பட்டோா் நலச் சங்கத் தலைவா் அலெக்ஸாண்டா் வரவேற்றாா்.முடிவில் பொது உறுப்பினா் விமல்டெல்பின் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT