அரியலூர்

அரியலூரில் 48 பேருக்கு கரோனா பாதிப்பு - 758; குணம் 620

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவா்கள் அனைவரும் அரியலூா், பெரம்பலூா், திருச்சி, தஞ்சாவூரில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை 758 ஆக உயா்ந்துள்ளது. 620 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

மீதமுள்ள 138 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 103 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் 11 பேரும், திருச்சி கொவைட் கோ் மையத்தில் ஒருவரும், அரியலூா், திருச்சி, கோவை, சென்னை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 12 பேரும், பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் 2 பேரும், தஞ்சாவூா், கும்பகோணம், விருத்தாசலம், சேலம் அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 5 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT