அரியலூர்

உதவித்தொகை பெற முதிா்ந்த தமிழறிஞா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ரத்னா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2020-21- ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் தமிழறிஞா்கள் 2020, ஜனவரி 1- ஆம் தேதியன்று 58 வயது நிறைவடைந்தவா்களாகவும், ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞா்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தோ்ந்தெடுக்கப்படும் தமிழறிஞா்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை, ரூ.500 மருத்துவப்படி, வாழ்நாள் முழுவதும் இலவசப் பேருந்து சலுகையும் வழங்கப்படும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கிவரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT